திருவருட்பா  42. நாள் அவத்து அலைசல்

இன்றிருந்  தவரை  நா€ளைஇவ்  வுலகில்  இருந்திடக்  கண்டிலேம்  ஆஆ 
என்றிருந்  தவத்தோர்  அரற்றுகின்  றனரால்  ஏழையேன்  உண்டுடுத்  தவமே 
சென்றிருந்  துறங்கி  விழிப்பதே  அல்லால்  செய்வன  செய்கிலேன்  அந்தோ 
மன்றிருந்  தோங்கும்  மணிச்சுடர்  ஒளியே  வள்ளலே  ஒற்றியூர்  வாழ்வே. 
1
தாவியே  இயமன்  தமர்வரும்  அந்நாள்  சம்புநின்  திருவருள்  அ€டையாப் 
பாவியேன்  செய்வ  தென்என  நெஞ்சம்  ப€தைப€தைத்  துருகுகின்  றனன்காண் 
கூவியே  எனக்குன்  அருள்தரின்  அல்லால்  கொடியனேன்  உய்வ€கை  அறியேன் 
வாவிஏர்  பெறப்பூஞ்  சோ€லைசூழ்ந்  தோங்கி  வளம்பெறும்  ஒற்றியூர்  வாழ்வே. 
2
நீரின்மேல்  எழுதும்  எழுத்தினும்  வி€ரைந்து  நி€லைபடா  உடம்பி€னை  ஓம்பிப் 
பாரின்மேல்  அ€லையும்  பாவியேன்  தனக்குப்  பரிந்தருள்  பாலியாய்  என்னில் 
காரின்மேல்  வரல்போல்  கடாமி€சை  வரும்அக்  காலன்வந்  திடில்எது  செய்வேன் 
வாரின்மேல்  வளரும்  திருமு€லை  ம€லையாள்  மணாளனே  ஒற்றியூர்  வாழ்வே. 
3
கருங்கணம்  சூழக்  கசியும்இவ்  வுடலம்  கருதும்இக்  கணமிருந்  ததுதான் 
வருங்கணம்  ஏதாய்  முடியுமோ  ஐயோ  வஞ்சனேன்  என்செய  வல்லேன் 
பெருங்கணம்  சூழ  வடவனத்  தாடும்  பித்தனே  உத்தம  தவத்தோர் 
மருங்கண  வுறநின்  றரகர  எனுஞ்சொல்  வான்புகும்  ஒற்றியூர்  வாழ்வே. 
4
கன்னியர்  அளகக்  காட்டி€டை  உழன்ற  கல்மனக்  குரங்கினேன்  த€னைநீ 
அன்னியன்  என்றே  கழித்திடில்  உனக்கிங்  கார்சொல  வல்லவர்  ஐயா 
என்னியல்  அறியேன்  நமன்தமர்  வருநாள்  என்செய்வேன்  என்செய்வேன்  அந்தோ 
மன்னிய  வன்னி  மலர்ச்ச€டை  மருந்தே  வளங்கொளும்  ஒற்றியூர்  வாழ்வே. 
5
பசிக்குண  வுழன்றுன்  பாததா  ம€ரை€யைப்  பாடுதல்  ஒழிந்துநீர்ப்  பொறிபோல் 
நசிக்கும்இவ்வுட€லை  நம்பினேன்  என்€னை  நமன்தமர்  வருத்தில்என்செய்கேன் 
விசிக்கும்நல்  அரவக்கச்சினோய்  நினது  மெய்அருள்  அலதொன்றும்  விரும்பேன் 
வசிக்கும்நல்  தவத்தோர்க்  கருள்செயஓங்கி  வளம்பெறும்  ஒற்றியூர்  வாழ்வே. 
6
கான்றசோ  றருந்தும்  சுணங்கனின்  பலநாள்  கண்டபுன்  சுகத்€தையே  விரும்பும் 
நான்றநெஞ்  சகனேன்  நமன்தமர்  வருநாள்  நாணுவ  தன்றிஎன்  செய்கேன் 
சான்றவர்  மதிக்கும்  நின்திரு  வருள்தான்  சார்ந்திடில்  தருக்குவன்  ஐயா 
மான்தனிக்  கரத்தெம்  வள்ளலே  என்€னை  வாழ்விக்கும்  ஒற்றியூர்  வாழ்வே. 
7
மடிக்குறும்  நீர்மேல்  எழுத்தினுக்  கிடவே  €மைவடித்  தெடுக்குநர்  போல 
நொடிக்குளே  ம€றையும்  உடம்பி€னை  வளர்க்க  நொந்தனன்  நொந்ததும்  அல்லால் 
படிக்குளே  மனத்தால்  பரிவுறு  கின்றேன்  பாவியேன்  தனக்கருள்  புரியாய் 
வடிக்குறும்  தமிழ்கொண்  டன்பருக்  கருளும்  வள்ளலே  ஒற்றியூர்  வாழ்வே. 
8
அங்€கையில்  புண்போல்  உலகவாழ்  வ€னைத்தும்  அழிதரக்  கண்டுநெஞ்  சயர்ந்தே 
பங்கமுற்  ற€லைவ  தன்றிநின்  கமல  பாதத்€தைப்  பற்றிலேன்  அந்தோ 
இங்கெ€னை  நிகரும்  ஏ€ழையார்  எனக்குன்  இன்னருள்  எவ்வணம்  அருள்வாய் 
மங்€கையோர்  பு€டைகொள்  வள்ளலே  அழியா  வளங்கொளும்  ஒற்றியூர்  வாழ்வே. 
9
கணத்தினில்  உலகம்  அழிதரக்  கண்டும்  கண்ணிலார்  போல்கிடந்  து€ழைக்கும் 
குணத்தினில்  கொடியேன்  தனக்குநின்  அருள்தான்  கூடுவ  தெவ்வணம்  அறியேன் 
பணத்தினில்  பொலியும்  பாம்ப€ரை  ஆர்த்த  பரமனே  பிரமன்மால்  அறியா 
வணத்தினால்  நின்ற  மாணிக்கச்  சுடரே  வள்ளலே  ஒற்றியூர்  வாழ்வே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com