திருவருட்பா  54. அருள் ஆரமுதப் பேறு

விரைசேர்  பொன்மல  ரே  -  அதில்  -  மேவிய  செந்தே  னே 
கரைசேர்  முக்கனி  யே  -  கனி  -  யிற்சுவை  யின்பய  னே 
பரைசேர்  உள்ளொளி  யே  -  பெரும்  -  பற்றம்ப  லநடஞ்  செய் 
அரைசே  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
1
விண்ணார்  செஞ்சுட  ரே  -  சுடர்  -  மேவிய  உள்ளொளி  யே 
தண்ணார்  வெண்மதி  யே  -  அதில்  -  தங்கிய  தண்ணமு  தே 
கண்ணார்  மெய்க்கன  லே  -  சிவ  -  காமப்பெண்  காதல  னே 
அண்ணா  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
2
துப்பார்  செஞ்சடை  யாய்  -  அருட்  -  சோதிச்  சுகக்கட  லே 
செப்பா  மேனிலைக்  கே  -  சிறி  -  யேனைச்  செலுத்திய  வா 
எப்பா  லும்புக  ழும்  -  பொது  -  இன்ப  நடம்புரி  யும் 
அப்பா  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
3
மெய்யா  மெய்யரு  ளே  -  என்று  -  மேவிய  மெய்ப்பொரு  ளே 
கையா  ருங்கனி  யே  -  நுதற்  -  கண்கொண்ட  செங்கரும்  பே 
செய்யாய்  வெண்ணிறத்  தாய்  -  திருச்  -  சிற்றம்ப  லநடஞ்  செய் 
ஐயா  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
4
பொறிவே  றின்றி  நினை  -  நிதம்  -  போற்றும்  புனிதரு  ளே 
குறிவே  றின்றி  நின்ற  -  பெருஞ்  -  சோதிக்  கொழுஞ்சுட  ரே 
செறிவே  தங்களெ  லாம்  -  உரை  -  செய்ய  நிறைந்திடும்  பே 
ரறிவே  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
5
முத்தா  முத்தரு  ளே  -  ஒளிர்  -  கின்ற  முழுமுத  லே 
சித்தா  சித்திஎ  லாந்  -  தர  -  வல்ல  செழுஞ்சுட  ரே 
பித்தா  பித்தனெ  னை  -  வலிந்  -  தாண்ட  பெருந்தகை  யே 
அத்தா  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
6
தன்னே  ரில்லவ  னே  -  எனைத்  -  தந்த  தயாநிதி  யே 
மன்னே  மன்றிடத்  தே  -  நடஞ்  -  செய்யுமென்  வாழ்முத  லே 
பொன்னே  என்னுயி  ரே  -  உயி  -  ருள்நிறை  பூரண  மே 
அன்னே  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
7
ஒளியே  அவ்வொளி  யின்  -  நடு  -  உள்ளொளிக்  குள்ளொளி  யே 
வெளியே  எவ்வெளி  யும்  -  அடங்  -  கின்ற  வெறுவெளி  யே 
தளியே  அம்பலத்  தே  -  நடஞ்  -  செய்யுந்  தயாநிதி  யே 
அளியே  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
8
மருளேய்  நெஞ்சக  னேன்  -  மன  -  வாட்டமெ  லாந்தவிர்த்  தே 
தெருளே  யோர்வடி  வாய்  -  உறச்  -  செய்த  செழுஞ்சுட  ரே 
பொருளே  சிற்சபை  வாழ்  -  வுறு  -  கின்றவென்  புண்ணிய  னே 
அருளே  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
9
முன்பே  என்றனை  யே  -  வலிந்  -  தாட்கொண்ட  முன்னவ  னே 
இன்பே  என்னுயி  ரே  -  எனை  -ஈன்ற  இறையவ  னே 
பொன்பே  ரம்பல  வா  -  சிவ  -  போகஞ்செய்  சிற்சபை  வாழ் 
அன்பே  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
10
பவனே  வெம்பவ  நோய்  -  தனைத்  -  தீர்க்கும்  பரஞ்சுட  ரே 
சிவனே  செம்பொரு  ளே  -  திருச்  -  சிற்றம்  பலநடிப்  பாய் 
தவநே  யம்பெறு  வார்  -  தமைத்  -  தாங்கி  யருள்செய  வல் 
லவனே  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
11
தேனாய்த்  தீம்பழ  மாய்ச்  -  சுவை  -  சேர்கரும்  பாயமு  தம் 
தானாய்  அன்பரு  ளே  -  இனிக்  -  கின்ற  தனிப்பொரு  ளே 
வானாய்க்  காலன  லாய்ப்  -  புன  -  லாயதில்  வாழ்புவி  யாய் 
ஆனாய்  தந்தனை  யே  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
12
பொடியேற்  கும்புய  னே  -  அருட்  -  பொன்னம்  பலத்தர  சே 
செடியேற்  கன்றளித்  தாய்  -  திருச்  -  சிற்றம்  பலச்சுட  ரே 
கடியேற்  கன்னையெ  னுஞ்  -  சிவ  -  காமக்  கொடையுடை  யாய் 
அடியேற்  கின்றளித்  தாய்  -  அரு  -  ளாரமு  தந்தனை  யே. 
13
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com